காசியிடம் 6 நாள் விசாரிக்க மகளிர் போலீசுக்குஅனுமதி

நாகர்கோவில்: பல பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில், கணேசபுரத்தை சேர்ந்த காசி என்ற சுஜி(26), குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரை ஏற்கனவே போலீசார் 3 நாள் காவலில் விசாரித்திருந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக காசியை 6 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இதையடுத்து அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>