பைக் ரேசில் ஈடுபட்ட 8 வாலிபர்கள் கைது

சென்னை: ஊரடங்கு காரணமாக சென்னை முழுவதும் இரவு நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் அண்ணசாலையில்  பைக் ரேசில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பைக் ரேசில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் பறந்தனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று 4 பைக்கில் வந்த 8 பேரை மடக்கி பிடித்தனர்.

 விசாரணையில், புளியாந்தோப்பு ராமசாமி தெருவை சேர்ந்த சாலமன் (27), ஹாசிப் (27), முகமது ஜாகிருல்லா (27), ஹஷிம் பாஷா (26),  சையத் முகமது (24), சாலமன் (25), முஸ்தாக் முகமது (27), அரவிந்த் (27)  என தெரியவந்தது. அவர்களை, பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி பைக் ரேசில் ஈடுபட்ட 8 பேர் மீதும் ஐபிசி 279, 336 மற்றும் 184 போக்குவரத்து சட்டப்பிரிவுன் படி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு புல்லட் உட்பட 4 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>