2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பெரம்பூர்: வட சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதன்பேரில், அதிகாரிகள் ஆய்வு நடத்தி கடந்த வாரம் கொடுங்கையூர், திருவிக நகர் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 3 பேரை கைது செய்தனர்.  

இந்நிலையில், ராயபுரம் என்.என்.கார்டன் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இருந்து, வெளிமாநிலத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை குடியுரிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு டிஎஸ்பி ஜான் சுந்தர், இன்ஸ்பெக்டர் தயாள் உள்ளிட்ட போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மோகன் (39) என்பவரையும் கைது செய்தனர்.

Related Stories:

>