நகை வாங்குபவர்களுக்கு நற்செய்தி : சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து ரூ.35,968க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது.  தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24ம் தேதிக்கு முன்னர் சவரன் தங்கம்  31,616க்கு விற்கப்பட்டது. அதாவது மார்ச் 23ம் தேதி இந்த விலையில் விற்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் நகைக்கடைகள் மூடப்பட்டது. இருந்த போதிலும் நகை விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.  இந்த நிலையில் தற்போது ஏசி இல்லாத நகைக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்ந்து தங்கம் விற்பனை தொடங்கியுள்ள நிலையில் விலை ஏறவும் இறங்குமாக உள்ளது. இன்று விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (மே 21) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,496 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,524 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 28 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நேற்று 36,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 224 ரூபாய் குறைந்து 35,968 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.52.80லிருந்து ரூ.52.20 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 52,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: