மீன் வாங்க வந்தவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது

தண்டையார்பேட்டை: மீன் வாங்க வந்தவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூரை சேர்ந்தவர் கண்ணன் (36). இவர், கடந்த 16ம் தேதி அதிகாலை, காசிமேட்டில் மீன்வாங்க இரு சக்கர வாகனத்தில் வந்தார். அப்போது, அவரை வழிமறித்து 3 பேர் செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பினர். இதுகுறித்து, புகாரின்பேரில் காசிமேடு போலீசார் தனிப்படை அமைத்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர். இதுதொடர்பாக சரத் (19), ரமேஷ் (20), பிரேம் (20) ஆகிய மூவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரனையில், தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் இவர்களின் கூட்டாளிகளான கார்த்திக் (20), சந்தோஷ் (20), வசந்த் (20) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: