மோட்டார் வாகன காப்பீடு ஏப்ரலில் 49 சதவீதம் சரிவு

புதுடெல்லி: ஊரடங்கால் மோட்டார் வாகன காப்பீடு, கடந்த மாதத்தில் 49 சதவீதம் குறைந்துள்ளது. ஊரடங்கிற்கு பிறகு வாகன போக்குவரத்து அடியோடு குறைந்து விட்டது. நிறுவனங்களும் இயங்கவில்லை. வேலையிழப்பு, வருவாய் இழப்புகள் காரணமாக மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால், பல்வேறு துறைகளின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே, ஆயுள் காப்பீடு துறையில் பிரீமியம் வருவாய் குறைந்து விட்டது. இதுபோல், மோட்டார் வாகன காப்பீடுகளும் சரிவை சந்தித்துள்ளன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மோட்டார் வாகன காப்பீடு 49 சதவீதம் சரிந்து 2,621 கோடியாக உள்ளது என காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மூன்றாம் நபர் காப்பீடு 51 சதவீதம் சரிந்து,1,574 கோடியாக உள்ளது. காப்பீட்டு துறையில் மருத்துவு காப்பீடுதான் ஓரளவு கைகொடுத்துள்ளது. இதில் காப்பீடு விற்பனை 5.4 சதவீதம் அதிகரித்து 4,509 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. பலர், ஆன்லைன் மூலம் காப்பீடு செலுத்தியுள்ளனர் என காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: