சில்லி பாயின்ட்...

* வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கு  பிசிசிஐ நன்கொடையாக கொடுத்த ₹3.8 கோடியை செலவழிப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் குற்றம்சாட்டியுள்ளார்.

* விராத் கோஹ்லி டைனோசர் போல நடித்துக் காட்டும் நகைச்சுவையான வீடியோவை அவரது மனைவி அனுஷ்கா ட்வீட் செய்துள்ளார்.

* சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருந்தால்தான் வெற்றிகரமான பயிற்சியாளராக இருக்க முடியும் என்ற அவசியம் ஏதுமில்லை என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

* இந்தியாவில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் கட்டுக்குள் வந்தால், அக்டோபர் - நவம்பரில் ஐபிஎல் டி20 தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக முன்னாள் நட்சத்திர வீரர் அஞ்சுமன் கெயிக்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதில் கால்பந்து வீரர்களுக்கு பெரிய பிரச்னை ஏதும் இருக்காது, ஆனால் கிரிக்கெட்டில் அது அத்தனை எளிதல்ல என்று இந்திய கால்பந்து அணி முன்னாள் கேப்டன் பைசுங் பூட்டியா கூறியுள்ளார்.

* இந்திய ஹாக்கி அணி வீரர், வீராங்கனைகள் மீண்டும் பயிற்சியை தொடங்க உள்ள நிலையில், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை ஹாக்கி இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது. சொந்த வாகனங்களை பயன்படுத்துவது, சமூக இடைவெளி, பந்தை கையால் தொடக் கூடாது, கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் உட்பட 12 கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

* சிறுவனாக இருந்தபோது டெல்லியில் நடந்த ஜூனியர் லெவல் கிரிக்கெட் போட்டியில் சேர்க்க லஞ்சம் கேட்டார்கள். எனது தந்தை அதற்கு மறுத்துவிட்டதால் அப்போது என்னை களமிறக்க மறுத்துவிட்டார்கள்’ என்று கோஹ்லி தனது பழைய கசப்பான அனுபவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

Related Stories: