வங்கி விவரங்கள் திருட்டு கொரோனா வடிவில் வந்தது புது ஆபத்து: சிபிஐ எச்சரிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பற்றி தகவல் தெரிந்து கொள்ள புதிதாக ஏதாவது ‘லிங்க்’ மொபைலுக்கு வந்தால் ஏமாறாதீர்கள். கிரெடிட் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் திருடு போகலாம் என, சிபிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.  இது தொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு ஏஜென்சிகளுக்கு சிபிஐ அனுப்பியுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், ‘மக்கள் கொரோனா வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதை பயன்படுத்தி, கொரோனா வைரஸ் பற்றி தகவல் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும் என, எஸ்எம்எஸ்சில் ஒரு லிங்க் அனுப்புகின்றனர்.

அந்த லிங்கை அழுத்தினால், ஒரு சாப்ட்வேர் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் ஆகும். அதன்மூலம் செர்பரஸ் என்ற வைரஸ் ஸ்மார்ட்போனில் புகுத்தப்படும். அதன்மூலம், கிரெடிட் கார்டு உட்பட வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பயனாளரின் தனிப்பட்ட தகவல்களை திருடி விடுகின்றனர். இன்டர்போல் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளது என சிபிஐ தெரிவித்துள்ளது.

Related Stories: