தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரன் 752 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு  752 குறைந்தது. தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24ம் தேதிக்கு முன்னர் சவரன் தங்கம்  31,616க்கு விற்கப்பட்டது. அதாவது மார்ச் 23ம் தேதி இந்த விலையில் விற்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் நகைக்கடைகள் மூடப்பட்டது. இருந்த போதிலும் நகை விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.  இந்த நிலையில் தற்போது ஏசி இல்லாத நகைக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த 14ம் தேதி சவரன் 35,720, 15ம் தேதி  36,008, 16ம் தேதி 36,368க்கும் விற்கப்பட்டது.

நேற்று முன்தினம் (18ம் தேதி) ஒரு கிராம்  4,578க்கும் சவரன் 36,624க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு தங்கம் 94 குறைந்து ஒரு கிராம்  4,484க்கும், சவரனுக்கு  752 குறைந்து ஒரு சவரன்  35,872க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. இனி வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் குறைய, வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: