×

நேற்று 256 அதிகரிப்பு: 4 நாளில் சவரனுக்கு 1,080 உயர்வு: நாளுக்கு நாள் புதிய உச்சம்

சென்னை: ஆபரண தங்கம் விலை சென்னையில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 256 அதிகரித்தது.  ஆபரண தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி துவக்கத்தில் தங்கம் வசரன் 30,000ஐ தாண்டியது. ஜனவரி இறுதியில் 31,000 தாண்டியது. பிப்ரவரி மாதத்திலும் இந்த விலை உயர்வு தொடர்ந்தது. அதிகபட்சமாக பிப்ரவரி 24ம் தேதி சவரன் 752, கடந்த மார்ச் 4ம் தேதி சவரனுக்கு ₹824 என அதிரடியாக தங்கம் விலை உயர்ந்தது.  அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப்போர், சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகள் சரிந்தன. இதனால் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடுஅதிகரித்ததே இதற்கு காரணம்.

 ஊரடங்கிற்கு முன்பு கடைசியாக சென்னையில் ஆபரண தங்கம் சவரன் 31,616 ஆக இருந்தது. பின்னர் நகைக்கடைகள் ஊரடங்கால் மூடப்பட்டதும் வர்த்தர்கள் விலை நிர்ணயம் செய்யவில்லை. நகைக்கடைகள் திறக்கப்பட்டதும், விலை மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி ஊரடங்கு காலத்தில் தங்கம் சவரனுக்கு 4,048 உயர்ந்தது.
 கடந்த 11ம் தேதி முதல் சென்னையில் தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. 13ம் தேதி வரை விலை சற்று குறைந்தது. ஆனால், 14ம் தேதி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 176 உயர்ந்து 35,720க்கு விற்கப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக, சவரனுக்கு 15ம் தேதி 288, 16ம் தேதி 360 அதிகரித்தது.

நேற்று மாலை வர்த்த முடிவில் சவரனுக்கு 256 உயர்ந்தது. நேற்று காலை வர்த்தகம் துவங்கியதும், கிராமுக்கு 40 அதிகரித்தது. மாலையில் கிராம் 32ஆக குறைந்தது. இதன்படி சென்னையில் நேற்று வர்த்தக முடிவில் ஆபரண தங்கம் கிராம் 4,578க்கும், சவரன் 36,624க்கும் விற்கப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணம்.  அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் போக்கால் சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு டிராய் அவுன்ஸ் (31.10 கிராம்) 1,750 டாலராக உயர்ந்தது. நேற்று மீண்டும் அதிகரித்து அதிகபட்சமாக ஒரு டிராய் அவுன்ஸ் 1,766 டாலர் வரை சென்றது.  இதுவே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : hike , Ornamental Gold, Madras
× RELATED “தூத்துக்குடி, நெல்லை நிகழ்ச்சிகளை...