எட்டா கனியான ஆபரணத் தங்கத்தின் விலை : சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ரூ.36,688க்கு விற்பனை

சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றும் விலையேற்றம் நீடிக்கிறது.சென்னையில் இன்று (மே 18) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,586 ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை இதன் விலை 4,546 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 36,368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 320 ரூபாய் உயர்ந்து 36,688 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை இன்று தடாலடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.52 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.50.20 ஆக மட்டுமே இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 52,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,611 ஆகவும், டெல்லியில் ரூ.4,611 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,587 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,517 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,471 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,459 ஆகவும், ஒசூரில் ரூ.4,549 ஆகவும், கேரளாவில் ரூ.4,396 ஆகவும் இருக்கிறது.

Related Stories: