×

உலக சிக்கலை தீர்ப்பதற்க்கான ஒரு படிநிலை! பிளாஸ்டிக்கை தின்றும் மெழுகு புழுக்கள் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

உலகம் முழுக்க, ஒவ்வொரு நிமிடமும் சுமார் 2 மில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படியாக கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு, குவிந்துள்ள பிளாஸ்டிக் குவியல்களை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. பிளாஸ்டிக்குகள் மிகவும் ஆபத்தானவைகள், அதை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ், அரசாங்கங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டின் மீது தடை போன்ற சட்டங்களை கொண்டு வந்த நிலைப்பாட்டில், விஞ்ஞானிகள் ஒரு தீர்வை கண்டுபிடிக்க முயற்சி செய்து வந்தனர். அது தற்போது வெற்றி கண்டுள்ளது.அதுவும் புழுக்களின் உதவியுடன்!.

பிளாஸ்டிக் புதைகுழியை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும் இந்த புழுக்கள் ஆனது உண்மையில் மெழுகுப்புழு என்று அழைக்கப்படும் கேட்டர்பில்லர்கள் ஆகும். இதற்கு முன்னர் வளர்ப்பு வகையை சார்ந்த பல்லிகளுக்கு உணவாகவும், சில ஆராய்ச்சிகளில் பாலூட்டிகளுக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த புழுக்கள், கிரகத்தின் அழிவை தடுக்க உதவும் என்கிற விடயமா சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கிரேட்டர் மெழுகு பூச்சி


தேனி கூடுகளில் உள்ள மெழுகை உண்பதற்காக மெழுகு புழுக்கள் வருவது உண்டு. இந்த புழுக்கள் இறந்த தேனீக்களின் தோலையும், மகரந்தங்களையும், தேன் கூடுகளையும் கூட விட்டு வைப்பதில்லை. இந்த புழுக்கள் தேனி வளர்ப்பில் பெரிய தொல்லைகளை கொடுக்கும். இந்த மெழுகு புழுக்கள் பூச்சிகளாக (moth) பறந்து செல்லும். மூன்று வகையான பூச்சிகள் உலகில் காணப்படுகின்றன. லெஸ்ஸர் மெழுகு பூச்சி (lesser wax moth – Achroia grisella), கிரேட்டர் மெழுகு பூச்சி (Greater wax moth – Galleria mellonella), இந்தியன் மீல் பூச்சி (Indian meal moth – Plodia interpunctella). இதில் கிரேட்டர் மெழுகு பூச்சி பிளாஸ்டிக்கை தின்று பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிராக போராடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கம்பளிப்பூச்சிகளுக்குள், பிளாஸ்டிக் செரிமானம் அடைவது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. தேனீ வளர்ப்பவர் மற்றும் பேராசிரியர் ஆன பெட்ரிக்கா பெர்டோச்சினி (Federica Bertocchini) என்பவர் ஒரு பிளாஸ்டிக் பைக்குள் இந்த மெழுகு புழுக்களை போட்டு வைக்க, சிறுது நேரம் கழித்து அந்த பிளாஸ்டிக் பையில் பல துளைகளை கண்டு உள்ளார். இவ்வண்ணமே இந்த புழுக்களால் பிளாஸ்டிக்கை உண்ண முடியும் என்கிற உண்மை வெளிப்பட்டு உள்ளது. பின்னர், சுமார் 100 மெழுகு புழுக்களைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் பையைச் சேதப்படுத்தும் அடிப்படையின் கீழ் ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. சுமார் 40 நிமிடங்களுக்கு பிளாஸ்டிக் பையில் ஓட்டைகள் விழ தொடங்கின, சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு பிளாஸ்டிக்கின் வெகுஜனத்தில் 92 மில்லிகிராம் குறைந்து இருந்தது. இந்த ஆராய்ச்சியின் கீழ், மெழுகு புழுக்கள் உண்மையில் பிளாஸ்டிக்கின் வேதியியல் பிணைப்பை உடைக்கும் திறனை கொண்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


Tags : scientists , Greater wax insect, plastic, wax worms, scientists, invention
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு