வட தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் 2 நாட்கள் மழை நீடிக்கும்: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கோடை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் இந்த மலையானது 2 நாட்களுக்கு தொடரும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியா முழுவதுமே மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கக்கூடிய சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் சென்னையை பொறுத்தவரையில் இன்று மாலை 3.45 மணி முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர், பூவிருந்தவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. திருவள்ளூரில் உள்ள அம்பத்தூர், ஆவடி மற்றும் பட்டாபிராம் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் மதுரவாயல், திருவேற்காடு, போரூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கான காரணம் குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில்; கோடை மழை தொடங்கி விட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமின்றி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.

வட தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் 2 நாட்கள் மழை நீடிக்கும். உள்மாவட்டங்களில் காற்று வீசுவதில் காரணமாகவே மழை பெய்கிறது. மேலும் 2 தினங்களுக்கு இந்த மழை நீடிக்கும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கூறியுள்ளனர்.

Related Stories: