கொரோனா தொற்றில் தமிழகம் 3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு; 10- ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பரிசீலனை: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: தற்போது கொரோனா தொற்றில் தமிழகம் இரண்டாவது நிலையில் உள்ளது என முதலவர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலக் கட்டத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 குழுக்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி;

* கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

* தற்போது கொரோனா தொற்றில் தமிழகம் இரண்டாவது நிலையில் உள்ளது.

* கொரோனா தொற்று 3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

*கொரோனா பாதித்தவர்களின் குடும்பத்தினர் ,மற்றும் அவர்களை சுற்றியுள்ளோருக்கும் பரிசோதனை  

* அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் மருத்துவர்களுக்கு, மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்போம்.

* தமிழகத்தில் 19 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

* தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

* 2,500 வெண்டிலேட்டர் வாங்கவும் தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது.

* கொரோனா துரித ஆய்வு உபகரணங்கள் 4 லட்சம் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

* தமிழகத்திற்கு இன்று இரவு 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் வருகின்றன.

* கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்த ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்தப்பட உள்ளது.

 *தமிழகத்தில் சுமார் 3 லட்சம் வெளி மாநில தொழிலாளர்களின் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.

* முகக்கவசங்கள் உள்பட பாதுகாப்பு உபகரணங்கள் கையிருப்பில் போதுமான அளவில் உள்ளது.

* தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக 3,371 வெண்டிலெட்டர்கள் கையிருப்பில் உள்ளன.

* தமிழகம் முழுவதும் 32,371 படுக்கைகள் மருத்துவமனையில் தயாராக உள்ளது.

* விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது

* தமிழகத்தில் கொரோனா ஒருங்கிணைப்புக்குழு சிறப்பாக பணியாற்றி வருகிறது

* கொரோனா சிகிச்சைக்கு 137 தனியார் மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

* 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதவித்தொகை அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்கப்படும்

* நலவாரிய தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும்.

* 1,93,82,420 குடும்ப அட்டைகளுக்கு ரூ,1,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

* 1,46,812 கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

* திரைத்துறை தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட நல வாரிய தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிதியுதவி

* பட்டாசு தொழிலாளர்கள் 1.20 லட்சம் பேருக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்

* பல்வேறு நல வாரியங்களின் 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்.

* பணியின் போது மரணமடைந்த போக்குவரத்து காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

* போக்குவரத்து காவலரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

* வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை

*144 தடையை மீறியவர்களிடமிருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல்

* தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வாங்கிக் கொள்ளாலாம்.

* அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு தவிர, வேறு எதற்காகவும் வெளியில் வராதீர்கள்.

* கொரோனா புற்றுநோய் பரவலை முற்றாக தடுக்க வீடுகளில் தனித்திருத்தல் மிகவும் அவசியம்.

* ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வெளியில் செல்லும் போது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

* கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கான முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கலாம்

* கொரோனா தடுப்பு பணிகளுக்கு குறைந்த தொகையாக இருந்தாலும் பொதுமக்கள் தாராளமாக வழங்கலாம்.    

* கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம்

* கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதல் நிதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது; பதிலுக்கு காத்திருக்கிறோம்.

* கொரோனா நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

* கொரோனா இருந்தும் அதை மறைத்தால் இந்திய தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

* கொரோனா அறிகுறி இருப்பவர்கள் மறைத்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

* 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழநாடு அரசு பரிசீலித்து வருகிறது.

* 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது அனைத்து பணிகளுக்கான அடிப்படையாக உள்ளது.

Related Stories: