மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பெரியகுளம் பெண் விவசாயிகள் வயலில் நாற்று நட்டு அசத்தல்

பெரியகுளம்:  பெரியகுளத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு, விவசாய பெண் தொழிலாளர்கள் வயல்வெளியில் நெல் நாற்று நடவு செய்து அசத்தினர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள வடகரை மற்றும் தென்கரை பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் கூடுவதற்கு 144 தடை விதிக்கப்பட்டது. இதனால், வயல்களில் நெல் நடவு செய்யாமல் இருந்தனர்.

இந்நிலையில், விவசாய பணிகளை செய்யலாம் என தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, பெரியகுளம் வடகரை பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடி நடவு பணிகள் தொடங்கின. இப்பணியில் ஈடுபடும் விவசாய பெண் தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து, சமுக இடைவெளி விட்டு நடவு செய்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவலின் காரணமாக கூலியாட்கள் கிடைக்காததால், குறைந்த ஆட்களை வைத்து நடவு பணிகளை செய்து வருகின்றனர். ஆட்கள் பற்றாக்குறையால் தொழிலாளர்களுக்கு அதிக கூலி தர வேண்டியுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: