கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைக்கப்பட்ட 12 சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலக் கட்டத்தில் மக்களுக்கு  தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 குழுக்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவினர் தங்கள் பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர். எனினும்  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா நோய் பாதித்தவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தி வைக்கும் பணியும் அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைக்கப்பட்ட 12 சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.  ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பது தொடர்பாகவும், மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: