×

கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்க்க IVRS சேவை: காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை தீர்க்க IVRS சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிய வைத்தார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில பலி எண்ணிக்கை 88,403 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.  கொரோனாவால் இதுவரை 166 பேர் உயிரிழந்த நிலையில், 473 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 72 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 738 பேருக்கு தொற்று பாதிப்புடன் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் தமிழகத்தில் கோரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில், கொரோனா வைரஸ் தொடர்பான ஐவிஆர்எஸ் தானியங்கி குரல் வழி சேவையை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 94999 12345 என்ற அவசர உதவி எண்ணில் கொரோனா தொடர்பான விளக்கங்களை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கள், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : Palanisamy , IVRS service to resolve coronation related issues: Video footage started by Chief Minister Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...