சென்னையில் நடமாடும் காய்கறி மற்றும் மளிகை விற்பனை அங்காடியை தொடங்கி வைத்தார் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் நடமாடும் காய்கறி மற்றும் மளிகை விற்பனை அங்காடியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 5 ஆயிரம் தள்ளு வண்டிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார். 5,000 மூன்று சக்கர தள்ளுவண்டி, 2,000 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலம் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தள்ளுவண்டிகளில் விற்பனை செய்ய யார் முன்வந்தாலும் உடனே அனுமதி தரப்படும் என கூறினார். ஊரடங்கை மீறி மக்கள் அதிக அளவில் வெளியே வருவதை தடுக்கும் விதமாக வியாபாரிகளுடன் இணைந்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என கூறினார். மேலும்

கொரோனாவால் சென்னையில் அச்சப்படக்கூடிய சூழல் இதுவரை எங்கும் இல்லை என கூறினார். வீடு வீடாக ஆய்வு செய்யும்போது மக்கள் மறைக்காமல் தங்களிடம் உள்ள உடல்நலப் பிரச்னைகளை கூற வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் வெளியூர் சென்று திரும்பியவர்கள் தாமாக முன்வந்து கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் 144 தடை அமலில் இருப்பதால் மக்களின் சிரமங்களை குறைக்கவே இந்த நடமாடும் காய்கறி, மளிகை வண்டிகள் மூலம் அவர்கள் இருக்குமிடத்தில் கொண்டு சென்று விற்பனை செய்ய ஏற்பாது செய்துள்ளோம் என கூறினார். எனசே மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து வெளியே வராமல் இருக்க வேண்டும் என கூறினார். கொரோனா தொற்று வைரஸ் அதிகமளவில் பாதித்துள்ளதால் மக்கள் நலன் கருதி அனைத்து ஏற்பாடுகளும் மாநகராட்சி எடுத்து வருவதாக கூறினார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் போதும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றினால் கொரோன தொற்று பரவாமல் தடுக்கலாம் என கூறினார்.

Related Stories: