×

சில்லி பாயின்ட்...

* கோவிட்-19 நிவாரண நிதி திரட்டும் வகையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அணி முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
* 2020 விஸ்டன் கிரிக்கெட் இதழின் முன்னணி கிரிக்கெட் வீரர் விருதுக்கு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலமாக கடந்த 3 ஆண்டுகளாக இவ் விருதை பெற்று வந்த இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
* அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 6-15ல் நடப்பதாக இருந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் 2022, ஜூலை 15ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை அமெரிக்காவின் ஆரிகன் மாகாணம் யூஜீன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* நடப்பு சீசனுக்கான ஐ-லீக் கால்பந்து போட்டித் தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து ஊரடங்கு ஓய்ந்த பிறகே முடிவு செய்யப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கியுள்ள வீரர்களுக்கு உதவும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அவசர கால நிதியை ஒதுக்கியுள்ளது.
* நெய்மர் எப்போது வந்தாலும் அவரை வரவேற்க தயாராக இருக்கிறோம் என்று பார்சிலோனா அணி நட்சத்திர வீரர் சுவாரெஸ் தெரிவித்துள்ளார்.
* இத்தாலி தடகள நட்சத்திரம் டொனாட்டோ சாபியா கொரோனா தொற்று காரணமாக இறந்தார். இவர் ஒலிம்பிக் 800மீ ஓட்டத்தின் பைனல் வரை முன்னேறியவர்.


Tags : India-Pakistan Rivalry ,Raise Funds Covit , Covit-19, Relief Fund The, India, Pakistan
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...