கொரோனா நிவாரண நிதியாக 1032 கொடுத்த 2ம் வகுப்பு மாணவன்: மணப்பாறையில் நெகிழ்ச்சி

மணப்பாறை: கொரோனா நிவாரண நிதியாக தனது சேமிப்பு பணமான 1032ஐ இளநீர் வியாபாரியின் மகனான 7வயது சிறுவன்அளித்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. கொரோனா நிவாரண நிதி வழங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதன்படி பொதுமக்கள் அரசுக்கு அரசுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 7 வயது சிறுவன் தான் சேர்த்து வைத்த சிறு தொகையை தாசில்தாரிடம் வழங்கி நெகிழ்ச்சியடைய செய்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த விடத்திலாம்பட்டியை சேர்ந்த இளநீர் வியாபாரி நிர்மல்குமார். இவரது மகன் தர்ஷன். தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுவன் தர்ஷன், தனக்கு பெற்றோர் கொடுக்கும் பணததை சிறுக சிறுக சேர்த்து வைத்தார். அதில் ரூ.1,032 இருந்தது. இதையடுத்து கொரோனா நிவாரண நிதி வழங்க சிறுவன் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து நேற்று தனது பெற்றோருடன் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்துக்கு தர்ஷன் வந்தார். பின்னர் தாசில்தார் தமிழ்கனியிடம் தான் சேர்த்து வைத்திருந்த ரூ.1,032யை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார். இது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

Related Stories: