குந்தா வட்டார காங்கிரஸ் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு ஆரத்தி எடுத்து கவுரவிப்பு

மஞ்சூர்: கீழ்குந்தா பேரூராட்சியில் சுமார் 15க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடை வீதி, கிராமப்புறங்களில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இவர்களுக்கு கொரோனா அச்சுறுதல் காரணமாக பணிச்சுமை அதிகரித்துள்ளது. தினமும் காலை முதல் மாலை வரை பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிருமி நாசினி தெளிப்பது, நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் சேவையை பாராட்டி கடைக்காரர்கள் சங்கம் உள்பட பல்வேறு தரப்பினரும் நிதியுதவி மற்றும் மதிய உணவு வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக நேற்று குந்தா வட்டார காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் நேரு தூய்மை பணியாளர்களுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து அவர்களுக்கு பால், ரொட்டி, வர்க்கி, பிஸ்கட், பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி கவுரவித்தார்.

Related Stories: