திருவில்லிபுத்தூர் அருகே சாராய ஊறல் பறிமுதல்: ஒருவர் கைது

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பில் 80 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை மதுவிலக்கு போலீசார் தேடி வருகின்றனர்மதுவிலக்கு போலீசார் டிஎஸ்பி ஸ்டீபன் உத்தரவின் பேரில், கடந்த ஒரு வாரமாக சாராய ஊறல் மற்றும் கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செவலஊரணி அருகே உள்ள மாந்தோப்பில் சாராயம் காய்ச்சுவதற்கு சாராய ஊறல் வைத்திருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து விரைந்து சென்ற மதுவிலக்கு போலீசார், அங்கு 80 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கிருந்து நபரை பிடித்து விசாரித்தபோது அவர் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த மாடசாமி என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு எஸ்ஐ சக்திவேல் மற்றும் கோவிந்தன் தலைமையிலான போலீசார், அவரை கைது செய்து கிருஷ்ணன்கோவில் உள்ள மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்இதேபோல் ராஜபாளையத்தில் உள்ள சாஸ்தா கோயில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக எரி சாராயம் வைத்திருந்த ஒருவரை பிடிக்க முயன்றனர். அவர் எரிசாராயத்தை போட்டுவிட்டு தப்பியோடி விட்டார். விசாரணையில், அவர் முகவூரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர் வைத்திருந்த எரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: