குடியிருப்புகளில் புகுந்து வாழைகளை துவம்சம் மூணாறை மிரட்டும் ஒற்றை யானை: மக்கள் முடங்கியதால் உற்சாக நகர்வலம்

மூணாறு: மூணாறில் தொழிலாளர் குடியிருப்புகளில் புகுந்து வாழை மரங்களை நாசம் செய்த ஒற்றை யானையால் பரபரப்பு நிலவுகிறது.கேரள மாநிலம், மூணாறில் ஊரடங்கு உத்தரவால், பொதுமக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கின்றனர்; சாலைகளிலும் போக்குவரத்து இல்லை. இதனால், காட்டுயானைகள் தற்போது நகர்பகுதிகளுக்குள் சுதந்திரமாக உலா வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக தேயிலை தோட்டங்களுக்கு கூட்டம், கூட்டமாக வருகின்றன.

 இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் காலனி பகுதியில் ஒற்றை யானை புகுந்தது. தொழிலாளர்களின் குடியிருப்புகளில் இருந்த வாழை மரங்களை நாசம் செய்தது. காலனி பகுதியில் நீண்ட நேரம் சுற்றிய யானையை பொதுமக்கள் ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் வனப்பகுதிக்குள் துரத்தினர். காலனி பகுதியில் அடிக்கடி யானை நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்புகளுக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: