கொரோனா தொற்று அபாயத்தை மறந்து கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாமல் வியாபாரம்

திருப்பூர்:திருப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் சமூக இடைவெளியை பராமரிக்காமல், கடைகளில் வியாபாரம் நடந்து வருகிறது.திருப்பூர் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, அதிகாரிகள், போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனால், நோய் தொற்று அபாயம் குறித்து கண்டு கொள்ளாமல், குடியிருப்பு மற்றும் ரோட்டோரக் கடைகளில், அதிகமான மக்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக பெரியார் காலனி, அனுப்பர்பாளையம், காந்திநகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளில் ஏராளமான மளிகைக் கடைகள் உள்ளன. இதேபோல் இப்பகுதிகளில் உள்ள மெயின் ரோடுகளில் திடீரென அமைக்கப்பட்ட காய்கறிக்கடைகளும் ஏராளம்.

இந்நிலையில் இந்த கடைகளில் காலை நேரங்களில் மக்களிடையே சமூக இடைவெளி பராமரிக்காமல், கொரோனா தொற்று அபாயத்தை மறந்து விற்பனை நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால் கொரோனா நோய் தொற்று எளிதில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இது போன்ற கடைகளை அகற்றவும், சமூக இடைவெளி பராமரிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கவும் அதிகாரிகள் முன் வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: