தமிழகத்தில் நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை , சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளது. கொரோனா ஒருபுறம் அச்சுறுத்தி வரும் அதேவேளையில் சத்தமில்லாமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது வெயில். தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

Advertising
Advertising

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்; தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. தமிழகத்தில் ஆங்காங்கே 30-40 கிமீ வேகத்தில் சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

Related Stories: