×

ஈக்குவடாரில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடலை தெருக்களில் வீசிச் செல்லும் அவலம்

ஈக்குவடார் : தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஈக்குவடாரில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடலை தெருக்களில் வீசிச் செல்லும் அவலம் நடந்துள்ளது. கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் 82 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஈக்குவடார் நாட்டில் 172 பேர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு போதிய மரப்பெட்டிகள் கிடைக்காத காரணத்தினால் அட்டைப் பெட்டிகளில் உடல்களை வைத்து அடக்கம் செய்து வருகின்றனர்.

இன்னொருபக்கம், தங்களுக்கும் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தால், கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய யாருமே முன்வரவில்லை.ஏராளமானோர் வீடுகளில் சடலத்தை வைத்துக் கொண்டு இருக்க முடியாமல், தெருவில் கிடத்தி உட்கார்ந்துள்ளனர். யாரும் சடலங்களை கொண்டு போகவும் வரவில்லை, எத்தனை நாள் பிணத்தை தெருவில் போட்டு கொண்டு இருப்பது என்றும் தெரியாமல் சிலர் அங்கேயே சடலங்களை எரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

சிலர் சடலங்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வைத்து மருத்துவமனைக்கு வெளியிலேயே சாலையோரத்தில் போட்டுவிட்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இப்படி நாள்கணக்கில் சடலங்களை வைத்திருப்பதாலும், பொதுவெளியில் எரிப்பதாலும் மேலும் வைரஸ் பரவும் அபாயமும் உள்ளது. தொற்று நோய் பயம் காரணமாக இறந்தவர்களின் உடலை கிழிந்த துணியில் வைத்து சாலையில் இழுத்துச்செல்லும் வீடியோவும், இறந்தவர்களின் உடலை சாலையில் வீசிச் செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது. இதனை இணையத்தில் கண்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags : coroner ,death ,streets ,Ecuador Ecuador , Ecuador, corona, infection, dead, body, streets, plight
× RELATED அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த...