மருத்துவ உபகரணங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை

சென்னை: முகக்கவசம் உள்ளிட்டவைகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை இயக்குனர் (குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை) பிரதீப் பிலிப் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கும் நோக்கத்துடன் பதுக்குவது மற்றும் கடத்தி விற்பவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடை சட்டத்தில் கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினி ஆகியவைகளை கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நான்கு காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் மாவட்ட எல்லை, சோதனைச்சாவடி, சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் வாகன தணிக்கையும் செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: