×

குளிர்பதன கிடங்குகளில் விவசாயிகள் சேமித்து வைத்துள்ள காய்கறிகள், பழங்களுக்கு பயன்பாட்டு கட்டணம் இல்லை: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: குளிர்பதன கிடங்குகளில் காய்கறிகள், பழங்களை சேமித்து வைக்க வருகிற 30ம் தேதி வரை விவசாயிகளிடம் இருந்து பயன்பாட்டு கட்டண தொகை வசூலிக்கப்பட மாட்டாது என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

* குளிர்பதன கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைக்க விவசாயிகளிடம் இருந்து பயன்பாட்டு கட்டண தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்போதுள்ள சூழ்நிலையில் இன்னும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதை கருத்தில் கொண்டும், விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டண தொகை வருகிற 30ம் தேதி வரை வசூலிக்கப்பட மாட்டாது. இந்த கட்டண தொகை முழுவதையும் அரசே ஏற்கும்.  
* விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், விவசாயிகளிடம் நேரடியாக சென்று கொள்முதல் செய்திட தெரிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை கடனாக வழங்கப்படும்.
* கூட்டு பண்ணை விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை, நகர்ப் புறங்களிலுள்ள நுகர்வோருக்கு, அவர்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கூடுதலாக 500 தோட்டக்கலை துறையின் நடமாடும் விற்பனை வாகனங்களின் மூலம் விற்பனை செய்யப்படும்.  
* விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களை நியாயமான விலையில், பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட ஏதுவாக, தற்போது வியாபாரிகள் செலுத்தும் 1% சந்தை கட்டணத்தை வருகிற 30ம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை.



Tags : warehouses , Farmers, Vegetables, Chief Edapady
× RELATED ரூ.9.17 கோடி செலவில் 2 வட்ட செயல்முறை...