×

ஊரடங்கை மீறும் பொதுமக்களை அவமரியாதையுடன் நடத்தக்கூடாது: போலீசாருக்கு டிஜிபி உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பைக் மற்றும் கார்களில் சர்வ சாதாரணமாக வெளியில் சுற்றி வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று அதிகளவில் பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதற்கிடையே, மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கை மீறி வெளியே வரும் பொதுமக்களை போலீசார் லத்தி மற்றும் பிளாஸ்டிக் குழாயால் கடுமையாக தாக்கி வருகின்றனர். இதனால் மக்கள் பலர் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். பல இடங்களில் அவசர தேவைக்காக வெளியே செல்லும் மக்களை என்ன என்று கேட்காமல் போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்து வருகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி ேநற்று டிஜிபி அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.  ஊரடங்கை மீறும் மக்களை போலீசார் அவமரியாதையுடன் நடத்தக்கூடாது என அனைத்து போலீசாருக்கும் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் உத்தரவிட வேண்டும். அதேநேரம் போலீசாரின் உத்தரவை மீறி தொடர்ந்து வெளியே சுற்றி வரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

Tags : Public , Curfew, civilians, policemen, DGP
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...