×

ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை மரணம்

சென்னை: ஹாலிவுட்டில் 1964ல் வெளியான ஜேம்ஸ்பாண்ட் படமான ‘கோல்ட்ஃபிங்கர்’ படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஹானர் ப்ளாக்மேன். 1960களில் ஒளிபரப்பான ‘தி அவெஞ்சர்ஸ்’ என்ற பிரிட்டீஷ் தொலைக்காட்சி தொடரின் மூலம் அவரது உண்மையான பெயரே மறக்கப்படும் அளவுக்கு கேத்தி கேல் என்ற பெயர் பிரபலம் அடைந்தது. இந்நிலையில், இங்கிலாந்தின் லெவிஸ் நகரத்தில் உள்ள தனது வீட்டில், ஹானர் ப்ளாக்மேன் காலமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹானர் ப்ளாக்மேன் தனது 94வது வயதில் வயது மூப்பு காரணமாக  மரணம் அடைந்தார்’ என்று கூறப்பட்டுள்ளது.


Tags : Death ,film actress , Death , Jamsbond film, actress
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...