சைபர் குற்றவாளிகள் மருத்துவமனைகளுக்கு குறி: சிபிஐ எச்சரிக்கை

புதுடெல்லி: கொரோனா பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கம்ப்யூட்டர் குற்றவாளிகள், மருத்துவமனை நிர்வாகங்களை குறிவைத்து பணம் பறிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக சிபிஐ எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாநில போலீசாருக்கு சிபிஐ எழுதியுள்ள கடிதத்தில், ‘மருத்துவமனை மற்றும் மருத்துவ சேவைகளை குறிவைத்து பணம் பறிக்கும் நடவடிக்கையில் கம்ப்யூட்டர்  குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனைகள் கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்துள்ள முக்கிய ஆவணங்களை ஹேக் செய்யும் இவர்கள், பணம் கொடுத்தால்தான் அவற்றை விடுவிக்க முடியும் என மிரட்டும் செயல்கள் நடைபெறுவதாக  இன்டர்போல் எச்சரித்துள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகங்கள் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேகரித்து வைக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: