மின்வாரிய தொழிலாளர்களுக்கு முகக்கவசம், சானிடைசர், கையுறை பற்றாக்குறை

சென்னை: மின்வாரியத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து  பாதுகாத்துக்கொள்ள தேவையான முகக்கவசம், சானிடைசர் மற்றும் கையுறை   பற்றாக்குறையாக உள்ளதாக  மின்கழக தொமுச பொதுச் செயலாளர் சிங்கார.ரத்தினசபாபதி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: களப்பிரிவு மூன்றாம் நிலை, நான்காம் நிலை ஊழியர்கள் சுமார் 53,000 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தற்பொழுது மின் வாரியம் அறிவித்துள்ளபடி மின்தடை இல்லாமல் பழுதுகளை சரி செய்வது மற்றும் துணை மின் நிலையம் முறைப்பணி செய்து வருகின்றனர்.

இந்த பணிகளுக்காக அதிகமான ஊழியர்கள் அதாவது இதற்கு சரிபாதியான ஊழியர்கள் விடுமுறை நாட்களில் வாரியம் கடைபிடிக்கும் முறைப்பணி அடிப்படையில் பணி செய்தாலே மின்சாரம் வழங்குவதில் பிரச்னைகள் ஏற்படாது. மேலும், பணியாற்றி வரும் மின்வாரிய தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான முக கவசம், சானிடைசர் மற்றும் கையுறை ஆகியவை பற்றாக்குறையான நிலையே உள்ளது. இது முழுவதும் கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும்.

Related Stories: