அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம்: வானியா கிங் ஓய்வு

வாஷிங்டன்: அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வானியா கிங், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக முன்கூட்டியே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் தலா 1 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள வானியா கிங் (31 வயது), 2020 டென்னிஸ் சீசனில் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெறப்போவதாக கடந்த பிப்ரவரியில் அறிவித்திருந்தார்.  கோவிட்-19 தொற்று காரணமாக விம்பிள்டன், இண்டியன் வெல்ஸ், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர்கள் ரத்தான நிலையில், உடனடியாக தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

Advertising
Advertising

முழங்கால் மூட்டு காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 50வது இடம் வரை முன்னேறிய வானியா, இரட்டையர் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு 15 சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ளதுடன் 3வது ரேங்க் வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: