நியூசிலாந்து விக்கெட் கீப்பர் ஜாக் எட்வர்ட்ஸ் மரணம்

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜாக் எட்வர்ட்ஸ் காலமானார். நியூசிலாந்து  அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜாக் எட்வர்ட்ஸ் (64). நியூசிலாந்து  அணிக்காக 1976-81 ஆண்டுகளில் களம் கண்டார். சர்வதேச அளவில்  மொத்தம் 8  டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். சர்வதேச  போட்டிகளில் அதிகபட்சமாக 55 ரன், முதல் தர  போட்டிகளில்  அதிகபட்சமாக 177 ரன் குவித்துள்ளார்.  முதல்தர மற்றும் லிஸ்ட்  ஏ போட்டிகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ரன் எடுத்துள்ளார். விக்கெட்  கீப்பராக இருந்தாலும் சர்வதேச அளவில் ஒரு ஓவர் மட்டும் பந்து வீசி ஒரு  விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளார்.

‘ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்’ என்று  ரசிகர்களால் புகழப்பட்ட ஜாக்,  டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாகவுக்கு எதிராக  முதல் போட்டியிலும், இந்தியாவுக்கு எதிராக கடைசிப் போட்டியிலும் விளையாடி  உள்ளார். அதே போல் ஒருநாள் போட்டியில் முதல், கடைசி இரண்டிலும்  இந்தியாவுக்கு எதிராகவே விளையாடினார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நெல்சனில் திங்கட்கிழமை இரவு காலமானார். அவரது மறைவுக்கு  கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Stories: