ட்வீட் கார்னர்...மகளுக்காக!

மகள் கட்டாயப்படுத்தி போட்ட வித்தியாசமான மேக்கப்புடன்  பாகிஸ்தான் அணி முன்னாள் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் காட்சியளிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கொரொனாவால் உலகமே  வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலையில், முஷ்டாக்கின் மகள் தனது தந்தைக்கு விதவிதமாக மேக்கப் போட்டு, வண்ண டோப்பாக்களை வைத்து அலங்கரித்து தனது பொழுதை போக்குகின்றார். அந்த வித்தியாமான மேக்கப்புடன்  வீடியோ வெளியிட்டுள்ள சக்லைன், ‘வீட்டில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பாதுகாப்பாக இருங்கள். எனது மகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மேக்கப் போட்டார். இப்போது மீண்டும் கட்டாயப்படுத்தி மேக்கப் போட்டுவிட்டார். ஆனாலும் எனக்கு பிடித்திருக்கிறது’ என்று தகவல் பதிந்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: