×

ஒரு பய வெளியே வரக்கூடாது... நேபாளத்தில் காண்டாமிருகம் ரோந்து

காட்மாண்டு : கொரோனா பரவுவதை தடுக்க நேபாளத்திலும் கடந்த 24ம் தேதி தொடங்கி வரும் 15ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி முக்கிய சந்தைகள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் நேபாள காண்டாமிருகம் தொடர்பான வைரல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 45 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், காண்டாமிருகம் ஒன்று சாலையில் செல்லும் நபரை விரட்டி செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.

நேபாளத்தின் சித்வான் தேசிய பூங்கா அருகே எடுக்கப்பட்ட இந்த வீடியோவுக்கு கீழே பர்வீன் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், ` ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை காண்டாமிருகம் ஆய்வு செய்கிறது என நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை வெளியான இந்த  வீடியோவை இதுவரை 1.1 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.  8500 பேர் லைக் செய்துள்ளனர்.



Tags : Nepal ,Rhinoceros , Corona, Nepal, Rhinoceros
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது