கொரோனாவை குணப்படுத்த மருந்து பில்கேட்ஸ் நிறுவனம் சோதனை

நியூயார்க்: கொரோனாவுக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்தை பில்கேட்ஸ் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனரான பில்கேட்ஸ், தனது தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு உதவி வருகிறார். தென் ஆப்பிரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய எபோலா நோயை கட்டுப்படுத்த அந்த நாட்டுக்கு உதவினார். தற்போது கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தனது தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தி வருகிறார். இதற்காக 7 நிறுவனங்களை பிரத்யேகமாக அவர் உருவாக்கியுள்ளார். இந்த நிறுவனங்கள் தனித்தனியாக ஆய்வு செய்து வெவ்வேறு வகையான கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும்.

இதில் 2 மருந்துகள் தேர்வு செய்யப்பட்டு அதை மனிதர்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார் பில்கேட்ஸ். இனோவியா பார்மடிக்கல்ஸ் என்ற அவரது நிறுவனம் `ஐஎன்ஓ 4800 என்ற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.  இந்த மருந்து பிலடேல்பியா மற்றும் மிசவுரி ஆகிய இடங்களில் உள்ள சோதனை கூடங்களில் பரிசோதனை செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. அங்கு 40 பேருக்கு இந்த மருந்து சோதனை செய்யப்படும். அவர்களுக்கு 4 வார இடைவெளியில் சோதனை செய்யப்படும். சோதனை முடிவுகள் சரியாக இருந்தால் வைரசுக்கு எதிராக எவ்வளவு தூரம் துரிதமாக இந்த மருந்து செயல்படும் என மேலும் 40 பேரிடம் 2ம் கட்ட சோதனை நடத்தப்படும்.

பின்னர் இது 100 பேரிடம் நடத்தப்படும். ஆராய்ச்சி தொடங்கி ஒரு மாதத்தில் இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதை கொரானா தடுப்பூசியாக செயல்படுத்துவது குறித்து ஆய்வு தொடங்கியுள்ளது.  இதில் இருந்து முதல் கட்டமாக 10 லட்சம் தடுப்பூசிகள் உருவாக்கப்படும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: