சிகிச்சை கிடைக்காமல் 10 பேர் சாவு: எல்லையை திறக்க கர்நாடக அரசு முடிவு: கேரள முதல்வர் தகவல்

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தையொட்டி தமிழக, கர்நாடக பகுதிகள் உள்ளன. இங்குள்ள நோயாளிகள் வயநாடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் தான் பெரும்பாலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு சட்டத்தால் சமீபத்தில் வயநாடு எல்லை மூடப்பட்டது. இதனால் கர்நாடக, தமிழ்நாடு மாநில எல்லையில் வசிப்பவர்கள் கேரளாவுக்கு சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நோயாளிகளுக்காக எல்லையை திறக்க கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே கேரள மாநிலம் காசர்கோடையொட்டியுள்ள தலப்பாடி பகுதியில் கர்நாடகா கடந்த ஒரு வாரத்துக்கு முன் தனது எல்லையை மூடியது.

இதனால் உரிய சிகிச்சை கிடைக்காமல் இதுவரை 10 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து கேரள அரசு, கேரள உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த இரு நீதிமன்றங்களும் மாநில எல்லையை திறக்க உத்தரவிட்டன. ஆனால் காசர்கோடு மாவட்டத்தில் கொரோனா ேநாயாளிகள் எண்ணிக்ைக அதிகமாக இருப்பதால் எல்லையை திறந்தால் கர்நாக மாநிலத்துக்கும் நோய் பரவும் என்பதால் எல்லையை திறக்க முடியாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார். இந்தநிலையில் தற்போது கொரோனா நோயாளிகள் தவிர அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும் எல்லையை திறக்க கர்நாடகம் சம்மதித்துள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார்.

குணமடைகிறவர்களின்  எண்ணிக்கை அதிகம்

இந்தியாவிலேயே கொரோனா நோயில் இருந்து குணமடைகிறவர்களின் எண்ணிக்கையில் கேரளம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 59 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் இறந்துள்ளனர். ஆனால் குணமடைகிறவர்களின் சதவீத கணக்கில் லடாக் முன்னிலையில் உள்ளது. அங்கு நோய் பாதிக்கப்பட்ட 14 பேரில் 10 ேபர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  கேரளாவில் இளைஞர்களை தான் கொரோனா அதிகமாக பாதித்து வருகிறது. நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியவர்களில் 41 சதவீதம் பேர் 20 முதல் 40 வயதுக்கு உள்பட்டவர்கள்.

செல்போன் கடைகள்  திறக்க அனுமதி

திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கேரளாவில் இன்று(நேற்று) மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதில் 4 பேர் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இன்று 12 பேர் நோய் குணமாகி உ்ள்ளனர். இதுவரை கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 336 ஆகும். கேரளாவில் செல்போன் கடைகள், ஒர்க்‌ஷாப்புகள், மோட்டார் உதிரி பாக விற்பனை கடைகள் வியாழன், ஞாயிற்று கிழமைகளில் திறக்க அனுமதி வழங்கப்படும்’’ என்றார்.

தனிமை வார்டில்  பிடிபட்ட பூனை சாவு

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் தான் மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் உள்ளனர். இங்குள்ள அரசு மருத்துவமனையில் 130க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த தனி வார்டில் 5 பூனைகள் இருந்தன. இதில் ஒரு பூனை 2 குட்டிகளை ஈன்று இருந்தது. இந்நிலையில் விலங்குகளுக்கும் கொரோனா பரவலாம் என அச்சம் எழுந்தது. இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விரைந்து சென்று 5 பூனைகளையும் பிடிக்க தீர்மானித்தனர். கவச உடை அணிந்து வலை விரித்து 5 பூனைகளையும் பிடித்தனர்.

கொரோனா வார்டில் இவை இருந்ததால் 5 பூனைகளையும் தனியாக வைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி விலங்குகள் காப்பகத்தில் தனித்தனி அறையில் பூனைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் குட்டிகள் ஈன்ற பூனை நேற்று திடீரென இறந்தது. இதையடுத்து மனிதர்களிடம் இருந்து பூனைக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பூனைகளுக்கு உணவு வாங்க செல்லலாம்

 கொச்சியை சேர்ந்த பிரகாஷ் என்பவர்  கடந்த சில தினங்களுக்கு முன்பு பூனைக்கு உணவு வாங்க தனது வாகனத்தில் வெளியே சென்றார். அவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில்,  மிருகங்களுக்கான உணவையும் மத்திய அரசு  அத்தியாவசிய தேவை பட்டியலில் சேர்த்துள்ளது.  எனவே எனது பூனைகளுக்கு உணவு வாங்க செல்ல அனுமதிக்க போலீசுக்கு உத்தரவு விட வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த வழக்ைக நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார், ஷாஜி, சாலி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பு அளித்தது. அதில், பூனைக்கு உணவு வாங்க போலீசார் தடை விதிக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: