கொரோனாவால் உலகம் மீளப் போவதில்லை; சீனாவில் என்ன நடந்தது? உண்மையை சொல்லுங்க..! வைரசில் இருந்து மீண்ட நியூயார்க் வக்கீல் உருக்கம்

நியூயார்க்: ‘கொரோனாவால் உலகம் இப்போதைக்கு மீளப் போவதில்லை; சீனாவில் என்ன நடந்தது? உண்மையை சொல்லுங்கள்’ என்று கொரோனாவில் இருந்து மீண்ட வக்கீல் உருக்கமாக தெரிவித்தார். உலகளவில் கொரோனா வைரஸ் பரவுவதால், இந்த வைரஸ் குறித்து சீனா உலகை இருளில் ஆழ்த்தியுள்ளது என்று மீண்டும்மீண்டும் உலக நாடுகள் குரல்களை உயர்த்தி எழுப்பி வருகின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான உயிர்கள் பலியாகியும்கூட, சீனா தரப்பில் இன்னும் முழுமையான உண்மையை வெளியே சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. சீனா தனது நாட்டில் இந்த வைரஸ் காரணமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகள் நடந்துள்ளதாகக் கூறியுள்ளது.

ஆனால், பல நாடுகளில் இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. அதனால், வைரஸ் உருவான இடத்திலேயே குறைந்தளவு இறப்பு என்று கூறுவதால், சீனாவின் தகவல் மீது சந்தேகங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ெகாரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள நியூயார்க் வழக்கறிஞர் ரவி பாத்ரா, ‘கொரோனா பாதிப்பு குறித்து சீனா முழு உண்மையையும் உலகுக்குச் சொல்ல வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. நியூயார்க் அதன் மையமாக உருவெடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.37 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

9900க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். கொரோனா நோய் தொற்று குறித்து சீனா முழு உண்மையையும் உலகிற்கு சொல்ல வேண்டும். இதனால் அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக சிகிச்சைக்கான வழிமுறைகளை கண்டறிய முடியும். தடுப்பூசி கிடைக்கும் வரை யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். இந்த கொடிய கொரோனா வைரசிலிருந்து மனிதநேயம் மீட்க விரும்புகிறேன். எங்கள் நாட்டு மருத்துவர் அந்தோனி ஃபாச்சி மட்டுமல்ல, அனைத்து நாடுகளிலிருந்தும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் விரைவில் ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கறிஞர் ரவி பாத்ராவைத் தவிர, அவரது குடும்பத்தினரும் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். அவரது மனைவி ரஞ்சு மற்றும் மகள் ஏஞ்சலா ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணத்திற்கு அருகில் இருந்து திரும்பிய பிறகு, தற்போது பேட்டி அளித்துள்ளார். ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் சீனாவின் தூதர் ஜாங் ஜுனிடம், ‘தடுப்பூசி கிடைக்கும் வரை யாரும் வேலை, விளையாட்டு அல்லது பள்ளிக்குச் செல்லவில்லை. தேசிய, பிராந்திய, உலகளாவிய பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது, இப்போதைக்கு மீளப் போவதில்லை’ என்று சீனாவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்திருந்தார்.

Related Stories: