×

குறிஞ்சிப்பாடியில் ஆதரவற்றோருக்கு தீயணைப்பு படையினர் உணவு வழங்கல்

நெய்வேலி: குறிஞ்சிப்பாடியில் ஆதரவற்ற மக்களுக்கு தீயணைப்பு படையினர் உணவு, தண்ணீர் வழங்கி உதவி வருகின்றனர். குரங்குகள், பறவைகளுக்கும் உணவு அளிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர், நடைபாதையில் வசிப்போர் மற்றும் ஆதரவற்றோர் உணவின்றி அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு, தண்ணீர் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புபணி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தினந்தோறும் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி வருகின்றனர்.  தீயணைப்பு நிலையத்தில் சமைத்து குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலை அலுவலர் மணி தலைமையில் தினமும் உணவு வழங்கப்படுகிறது. மேலும் சாலை ஓரம் வசிப்பவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர தண்ணீர் தொட்டியில் கால்நடைகளுக்கு தண்ணீர் நிரப்பி வைக்கப்படுகிறது. மேலும் நாய்கள், பறவைகளுக்கும் தினமும் உணவு, தண்ணீர் வைக்கப்படுகிறது.

Tags : firefighters ,Kurinjipadi ,firemen , Good luck, firemen, food supplies
× RELATED சென்னையில் தீயணைப்பு வீரர்கள் 14...