ஜூன் 25-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என போலி அறிக்கை: WHO மறுப்பு...ஊரடங்கு தொடர்பாக எந்த முடிவும் வகுக்கவில்லை என அறிவிப்பு

லண்டன்: ஊரடங்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. WHO வெளியிட்டது போல் போலியாக தயாரிக்கப்பட்ட அறிக்கை செய்து சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ஜூன் 25-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என போலி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஊரடங்கு தொடர்பாக தாங்கள் எந்த நெறிமுறையும் வகுக்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. பொதுமக்களும் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது. அதில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது போல ஓர் அறிக்கை வெளியானது. அதில், இது முதற்கட்ட ஊரடங்கு அதன் பின்னர் சிறிது நாள் ஓய்வு விட்டு மீண்டும், மே மாதம் மற்றும் ஜூன் 25 வரை ஊரடங்கு தொடரும் என போடப்பட்டிருந்தது.

இந்த போலி செய்தி இணையத்தில் தீயாய் பரவியது. பின்னர் இந்த செய்தி போலி என மத்திய அரசு  இணையதளத்தில் செய்தி வெளியான பின்னரே இதன் உண்மை தன்மை விளங்கியது. உண்மை செய்தியை விட போலி செய்திகள் மக்களிடம் விரைவாக சென்றடைகிறது என்பதற்கு இந்த போலி செய்தியும் உதாரணமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் இதற்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஊரடங்கு தொடர்பாக தாங்கள் எந்த நெறிமுறையும் வகுக்கவில்லை, அது போலி செய்தி என விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: