இரும்பு, சிமெண்ட், உரம் உள்ளிட்ட 13 தொழிற்சாலைகள் இயங்க அனுமதி: மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இயங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: இரும்பு, சிமெண்ட், உரம் ஆகிய தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கரும்பு, டயர், பேப்பர் தொழிற்சாலைகளும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இயங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வரும் வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற தண்டனைகள் விதிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலானோர் வெளியில் வருவதை தவிர்த்து, வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கொரோனா தடுப்பு தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிருந்தாலும் இருந்தாலும் ஒரு சில தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதியை ஏற்கனவே தமிழக அரசு கொடுத்திருந்தது. இதனால் அதிகமான தொழிலார்கள் வேலையில்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 13 வகையான ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனைத்து துறை செயலாளர், டிஜிபி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அனுப்பியுள்ளார்.

அதில் தொழிற்சாலைகளை பொருத்தவரை ஸ்டீல், சிமெண்ட், உரம் தொழிற்சாலை, சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளி தொழிற்சாலை செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கரும்பு, பேப்பர், டயர், ஜவுளித்துறை, உருக்கு, கண்ணாடி ஆலை விதிகளுக்கு உட்பட்டு இயங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் குறைந்த பணியாளர்களை வைத்து பணியை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மருந்து தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. அந்த உத்தரவின் படி தற்போது இந்தியா முழுவதும் மருந்து தொழற்சாலைகள், மருந்து கடைகள் அனைத்தும் இயங்கி வருகின்றன. மருந்து தயாரிப்பு இல்லாமல் பிற தொழிற்ச்சாலைகள் குறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் விளக்கப்பட்டுள்ளது.

Related Stories: