×

அரக்கோணம் அருகே மாவு என நினைத்து பூச்சி மருந்தில் போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு : கணவர், மாமியார் உட்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை

அரக்கோணம் : அரக்கோணம் அருகே மாவு என நினைத்து பூச்சி மருந்தில் போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அடுத்த எஸ்ஆர் கண்டிகையில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த 19 வயது இளம்பெணான பாரதியின் மாமனார் பெரியசாமி, போண்டா மாவு மற்றும் பூச்சி மருந்து ஆகிய இரண்டையும் சேர்த்து கடையில் வாங்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பூச்சி மருந்தில் செய்த போண்டாவை சாப்பிட்ட பாரதியின் கணவர் சுகுமார், மாமியார் லஷ்மி, மாமனார் பெரியசாமி ஆகிய 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த பாரதிக்கு திருமணம் நடந்து இன்னும் ஓராண்டு கூட நிறைவடைவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Teenagers ,Flock Three ,Porcupine , Arachna, flour, insect, panda, teenager death, husband, mother-in-law, treatment
× RELATED ரூ.10க்கு கூவி கூவி விற்றும் பயனில்லை...