×

'ஒவ்வொரும் சிறு தொகை வழங்கினாலே பேருதவியாக இருக்கும்'.. கொரோனா தடுப்பு பணிக்கு அனைவரும் நிதியுதவி அளிக்க முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை : கொரோனா தடுப்பு பணியை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் நிதியுதவி அளிக்க முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரும் சிறு தொகை வழங்கினாலே பேருதவியாக இருக்கும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு (இந்தியா) முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மையங்கள் ஏற்படுத்தவும், பரிசோதனை உபகரணங்கள், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கு கணிசமான நிதி ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும் அமைப்புசாரா தொழிலளர்கள், ஏழை, எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் நிதி தேவைப்படுவதாகவும், அதற்கு நன்கொடையாளர்கள் மனமுவந்து பங்களிப்பை செலுத்துமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியை பொதுமக்கள் தாராளமாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறு துளி பெரு வெள்ளம் எனும் முதுமொழிக்கு ஏற்ப அனைவரும் குறைந்த தொகையை வழங்கினாலே ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும் என்று கூறிய அவர்,தொழில் அதிபர்கள், முன்னணி தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை குறிப்பிட்ட முதல்வர், https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html இணையதளம் வாயிலாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களும் கொரோனா நிவாரணத்திற்கு நிதி வழங்க முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.      


Tags : Palanisamy ,Corona Prevention Project , Corona, Prevention, Work, Funding, CM, Palanisamy, Request
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...