தமிழகத்தில் கொரோனா பரப்பிய குற்றத்திற்காக இந்தோனேஷியா, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு

சேலம் : மத உபதேசங்களுக்காக இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த சிலரால் கொரோனா வைரஸ் பரவியதாக கூறி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தோனேசியா நாட்டில் இருந்து இவர்கள் 11 பேரும் மத போதனைக்காக கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி சேலத்திற்கு வந்தவர்கள் ஆவர். இவர்கள் மட்டுமன்றி இவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டவர்கள் மற்றும் தங்க ஏற்பாடு செய்தவர்கள் என 7 பேர் மீது கொரோனா வைரஸ் பரப்பியதாக வழக்குப்பதியப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதே போன்று தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோட்டுக்கு மத உபதேசம் செய்ய வந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால், பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று மத உபதேசங்களுக்காக வந்து,கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டவர்கள் மீதும் வழக்குப்பதிய காவல்துறை ஏற்பாடு செய்து வருகிறது.   

Related Stories: