கொரோனா தடுப்பு நடவடிக்கை: அமெரிக்கா வெண்டிலேட்டர்களை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி

சென்னை: அமெரிக்கா வெண்டிலேட்டர்களை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட வெட்டிலேட்டர்கள் என்பதால், அவைகளின் தரத்தை சோதித்தபிறகு பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரேனா வைரசால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 621 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைககளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா வெண்டிலேட்டர்களை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது. நவம்பர் 2018-ல் சென்னையைச் சேர்ந்த ஸ்கைலார்க் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்திருந்தது. ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை, இறக்குமதி செய்ய தடை இருப்பதால், ரூ.4 கோடி மதிப்புள்ள ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வெட்டிலேட்டர்கள் சென்னை துறைமுகத்திலேயே வைக்கப்பட்டிருந்தன.

தகவல் அறிந்த தமிழக அரசு, கொரோனா தொற்றுக்காலத்தில் வெண்டிலேட்டர்களின் தேவைப்படுவதாகவும், தடையை தளர்த்தக் கோரியும், மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது. கொரோனா தீவிரமாக பரவிரும் நிலை, அவசர நிலை கருதி, மத்திய அரசு விதிகளை தளர்த்தி அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட வெட்டிலேட்டர்கள் என்பதால், அவைகளின் தரத்தை சோதித்தபிறகு பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. மத்திய அரசின் அனுமதியையடுத்து, துறைமுகத்திலிருக்கும் வெட்டிலேட்டர்களை இன்று கொள்முதல் செய்வதாக தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குநர் உமாநாத் கூறியுள்ளார்.

Related Stories: