×

கொரோனா தடுப்புக்கு பிற மாநிலங்களை விட தமிழகத்திற்குக் குறைவான நிதி ஏன்? : இது தான் மத்திய அரசின் கொரோனா அரசியல் என ஸ்டாலின் விமர்சனம்

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழ்நாட்டிற்கு குறைவான நிதியை ஒதுக்கி இருப்பது மத்திய அரசின் கொரோனா அரசியல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மராட்டியத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் தான் அதிகம் என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார்.பாதிப்பு குறைவாக உள்ள உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 234 பேர் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள ஸ்டாலின், பாஜக ஆளாத மாநிலம் என்பதால் தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்கீடா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூ.12,200 கோடி கேட்ட தமிழக அரசுக்கு வெறும் ரூ.510 கோடி மட்டும் ஒதுக்கியது பாரபட்சமான அணுகுமுறை என்றும் இது தான் கொரோனா அரசியல் என்றும் ஸ்டாலின் வர்ணித்துள்ளார்.2 ஆண்டு காலத்திற்கு எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடையாது என்ற அறிவிப்பை எதிர்த்துள்ள அவர்,தொகுதிகளில் ஆக்கபூர்வமான காரியங்கள் விட்டுப்போகும் என்று கூறியுள்ளார். அத்துடன் பிற மாநிலங்களைவிட தமிழகத்திற்குக் குறைவான நிதி, MP-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி வைப்பு போன்ற செயல்கள் ஜனநாயக வழிமுறையன்று என்று அறிக்கையில் தெரிவித்த அவர், விஸ்டா திட்டத்துக்கு ரூ.20,000 கோடி போன்ற தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, அனைத்து நிதியையும் மக்கள் நலனுக்கு முறைப்படி பயன்படுத்த பிரதமரை தாம் கேட்டுக் கொள்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,government ,states ,Stalin , Corona, Prevention, States, Tamil Nadu, Low Finance, Federal Government, Corona Politics, Stalin, Review
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...