மதுரை சித்திரை திருவிழா நடக்குமா?: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: மதுரை சித்திரை திருவிழா நடைபெறுவது குறித்து உறுதியான அறிவிப்பு வரும் 14ம் தேதிக்கு பின் வெளியாகும்  என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு  வீடுகளுக்கு இலவசமாக சுமார் 60 ஆயிரம் மாஸ்க்குகளை நேற்று அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் வழங்கினர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அரசாங்கம் சட்டம் போட்டு மக்களை கட்டுப்படுத்த முடியாது. மக்களே தாங்களாகவே முன்வந்து சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும், உலக வல்லரசு நாடான அமெரிக்காவே தற்போது முடங்கியுள்ளது. கொரோனாவிற்கு அஞ்சி நடுங்குகிறது. அங்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இந்த வைரஸ் தாக்கத்தினால் பலர் சுயகட்டுப்பாடுகளுடன் வீடுகளில் இருக்கிறார்கள்.

 மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுமா என்பது குறித்து, வரும் 14ம் தேதிக்கு பிறகுதான் தெரிய வரும். தமிழகத்தில் வைரஸ் தாக்கம் கூடுகிறதா அல்லது குறைகிறதா என்று அறிந்த பின்பே, சித்திரை திருவிழா பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும், பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுவதும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக விளக்கேற்றிய காட்சியை பார்க்க முடிகிறது. இது உண்மையிலேயே அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது, மதுரையில் பல இடங்களில் பொதுக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக இருந்தனர்’’ என்றார்.

Related Stories: