கிருமிநாசினி சுரங்கம் திறப்பு அதிமுக எம்பி விழாவில் சமூக இடைவெளி இல்லை: ஆண்டிபட்டி அருகே பரபரப்பு

ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேனி எம்பி ரவீந்திரநாத் குமார் பங்கேற்ற கிருமிநாசினி சுரங்க திறப்பு விழாவில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கொரோனா சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு, தொற்றுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று நோயை தடுக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் வளாகத்தின் வெளியே கிருமிநாசினி சுரங்கம் அமைப்பட்டுள்ளது. இந்த கிருமிநாசினி சுரங்கத்தை நேற்று தேனி எம்பி ரவிந்திரநாத்குமார் திறந்து வைத்தார்.விழாவின்போது மருத்துவக்கல்லூரி நிர்வாகிகள், மருத்துவர்கள், அதிமுக கட்சியினர் என 100க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியின்றி நின்றனர். எளிதில் பரவ கூடிய கொரோனா தொற்றுநோய் தாக்குதல் குறித்து மருத்துவர்கள் மட்டுமின்றி பலரும் அறிந்த நிலையில், சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக நின்ற சம்பவம் காண்போரை அச்சமடைய வைத்தது.

Related Stories: