உயிர்காக்கும் பணியில் உள்ளவர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்: ஜி.கே.வாசன் அறிவுரை

சென்னை:  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   சென்னையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக பரிசோதனை செய்ய மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வலர்கள், சுகாதாரத்துறையினர் ஆகியோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இனி அந்தந்த மாவட்டங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் வீடு வீடாக சென்று ஒவ்வொருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட கேட்டுக்கொள்வது அந்த நபருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அந்த பகுதிக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.அப்படி மருத்துவ பரிசோதனை செய்ய வரும் இவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மக்களின் கடமை. மாறாக அவர்களை மதிக்காமல் அவர்களது பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் புறந்தள்ளுவது ஏற்புடையதல்ல.  

அது அனைவரையும் பாதித்துவிடும். எனவே மருத்துவ பரிசோதனைக்கு வருபவர்களை உதாசீனப்படுத்தாமல் அவர்களை மதித்து நடக்க வேண்டுமே தவிர தடங்கலாக இருக்கக்கூடாது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயம். எனவே உயிர்காக்கும் பணியில் ஈடுபடுகின்ற சேவைப்பணிக்கு தடங்கல் இல்லாமல் வழி விடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: